உஸ்பெகிஸ்தானில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயெவ் விடுத்த அழைப்பை அடுத்து, சமர்க்கண்ட்டில் வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இம்மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட 15 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பெருந்தொற்று பாதிப்பிற்கு பிறகு முதன்முறையாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உலகத் தலைவர்கள் நேரில் பங்கேற்க உள்ளனர்.