பாசுமதி அல்லாத இதர அரிசி ஏற்றுமதிகளுக்கு மத்திய அரசு 20 சதவீத சுங்க வரியை விதித்துள்ளது.இந்த புதிய வரிவிதிப்பு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.
தற்போதைய காரிப் பருவ பயிர்கள் போதிய விளைச்சல் இல்லாமல் போனதால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நெல் உற்பத்தி குறைந்திருப்பதால் அரிசிக்குத் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.