பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை, உயர் கல்வி வளர்ச்சி உள்ளிட்ட ஆறு புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்ப்டடுள்ளது.
இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகத்துடன்இணைந்து கல்வியை மேம்படுத்தும் இரண்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டிலும் இந்தியாவிலும் மாணவர்கள் கூட்டாக அல்லது இரண்டு பட்டங்கள் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
27 ஆயிரத்து 360 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகள், தொழில் நுட்பத்துடன் கூடிய 14 ஆயிரத்து 500 முன்மாதிரி ஷ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ரயில்வே நிலங்களை 35 ஆண்டுகளுக்கு குத்தகை விடும் பிரதமரின் கதிசக்தி திட்டம் மூலம் ரயில்வேயின் வருவாயை அதிகரிக்கவும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.