நாடாளுமன்றம், பிரதமர் இல்லம், குடியரசுத் துணைத் தலைவர் இல்லம் உள்ளிட்டவற்றை கொண்ட மத்திய விஸ்டா வளாகத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் முக்கோண வடிவிலான நாடாளுமன்றம், குடியரசு துணைத் தலைவர் மாளிகை , பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லம் போன்றவற்றை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை பிரதமர் மோடி நாளை தேதி திறந்து வைக்கிறார்.
ராஜபாதையில் கட்டப்பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டா வளாகத்தில் மாநில வாரியான உணவகங்களுக்கும் பசுமை நடைபாதைகளும், தோட்டங்களும், பார்க்கிங் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
விஜய் சவுக் முதல் இந்தியா கேட் வரையிலான மொத்த வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
20 மாதங்களுக்கு இப்பகுதியைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை ஒட்டி டெல்லியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நடந்து செல்வோருக்கு பாதுகாப்பாக சில சாலைகளில் வாகனங்களுக்கு நாளை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.