கடன் வழங்கும் சீன செயலிகள் தொடர்பான வழக்கில், Paytm நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனைக்கு பின், அந்நிறுவனத்தின் பங்குகள் ஆறு சதவீதம் சரிவுக்குள்ளாகின.
வர்த்தகத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, பேடிஎம் நிறுவனத்தின் ஒரு பங்கு 727 ரூபாய் 55 பைசாவாக இருந்த நிலையில், இன்று ஒரு பங்கின் விலை 1.79 சதவீதம் குறைந்து 714 ரூபாய் 55 பைசாவாக வர்த்தகமானது.
கடந்த ஆண்டில் அந்நிறுவனத்தின் பங்குகள் 55 சதவீதம் அளவுக்கு சரிவுக்குள்ளான நிலையில், நடப்பாண்டில் 47 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.