வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா, 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு இந்திய அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய பயணத்தின்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேசவுள்ளார்.
இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு துறையில் நிலவும் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது, தெற்காசிய பிராந்தியத்தில் ஸ்திரதன்மையை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரது பயணத்தின்போது ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
2 நாடுகளுக்கு இடையே ராஜ்ஜீய உறவு ஏற்படுத்தப்பட்டு 2021ம் ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையடுத்து அவர், இந்தியா வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். தெற்காசியாவில் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், இந்தியா அதிகளவில் செய்யும் 4வது நாடாகவும் வங்கதேசம் உள்ளது.