ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த வந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தபாரக் ஹூசேன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தான்.
பாகிஸ்தான் கர்னல் யூனுஸ் தன்னிடம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து இந்தியாவில் ஊடுருவி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துமாறு தமக்கு கட்டளையிட்டதாக அவன் வாக்குமூலம் அளித்திருந்தான்.
இதே போல் மேலும் 4 அல்லது 5 பேர் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவன் தெரிவித்தான். பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த அவன் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்