அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சலுகை விலையில் பருப்பு வகைகளை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூடியது.
கொள்முதல் செய்யப்பட்டுள்ள 15 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகளை காலி செய்யவும், துவரை, உளுந்து மற்றும் மசூர் பருப்புகளை கொள்முதல் செய்வதற்கான வரம்பை 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
12 மாத காலத்திற்கு வழங்கப்படும் இந்த சலுகை திட்டம் மூலம் தள்ளுபடி விலையில் பருப்புவகைகளை கொள்முதல் செய்து தங்களது உணவு திட்டங்களுக்கு மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.