அதிநவீன சொகுசு கார்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான BMW குழுமத்தின் ஹைப்ரிட் மின்சார வாகனங்களுக்கு, பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள எல்என்டி நிறுவனம் 5 ஆண்டுகளுக்கான பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
இதன்மூலம், BMW நிறுவனத்தின் தகவல் மற்றும் பொழுதுபோக்கு சேவைகளை வழங்கும் பணிமனைக்கு உயர்நிலை பொறியியல் சேவைகளை எல்என்டி டெக்னாலஜிஸ் நிறுவனம் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.