செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

கடற்படைக்கு வலுசேர்க்க உள்ள ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல்..!

Aug 30, 2022 06:36:27 PM

கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை கொச்சியில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்கப்பல், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட அந்த கப்பலை கட்டும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதன்மூலம் விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது.

வீரர்கள், பணியாளர்கள் என மொத்தம் ஆயிரத்து 700 பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இக்கப்பலிலிருந்து மிக் - 29கே ரக போர் விமானங்கள், கமோவ் கே.ஏ.- 31 ரக ஹெலிகாப்டர்கள், எம்ஹெச் - 60ஆர் ஹெலிகாப்டார்கள் ஆகியவற்றை இயக்கவும் தரையிறக்கவும் முடியும்.

262 மீட்டர் நீளம் மற்றும் 59 மீட்டர் உயரம் கொண்ட இந்த போர்க்கப்பல் 45 ஆயிரம் டன் எடை கொண்டதாகும். மேலும் 7,500 நாட்டிக்கல் மைல் தூரம் வரை தொடர்ந்து பயணிக்கும் வல்லமை கொண்டது. 15 அடுக்குகள் கொண்ட இந்த கப்பலில் 2,500 அறைகள் உள்ளன. மேலும் 30 விமானப்படை விமானங்களுடன் பயணிக்க கூடிய வல்லமை கொண்ட இந்த போர்க்கப்பலின் அதிகபட்ச வேகம் 28 நாட்ஸ் ஆகும்.

இந்த கப்பலில் 2 அறுவை சிகிச்சை அறைகள், 16 படுக்கைள், பரிசோதனை மையங்கள், சி.டி.ஸ்கேன் வசதி என பல மருத்துவ வசதிகள் இடம் பெற்றுள்ளது. 

இந்நிலையில், கொச்சியில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறும் விழாவில் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். அன்றைய தினமே மங்களூரில் நடைபெறும் விழாவில் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

 


Advertisement
மக்களால் 80, 90 முறை நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்த முயற்சி - பிரதமர் மோடி
தொடர்ந்து ரத்து செய்யப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்..
குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது..
நானும் என்.சி.சி. மாணவர் தான் - பிரதமர் மோடி பெருமிதம்..
மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி
வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்

Advertisement
Posted Nov 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“எங்க வந்து யாருகிட்ட..” அட்ராசிட்டி பாயை ஓட விட்ட நகராட்சி ஊழியர்..! கடைக்கும் பூட்டு போட்டனர்

Posted Nov 25, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

விடிய விடிய 6 பீர் குடித்தாரம்.. பலியான 27 வயது பெண்..! லாட்ஜில் நடந்தது என்ன? 60 வயது நண்பரிடம் விசாரணை

Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்


Advertisement