டெல்லியில் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவி விலகக் கோரி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களும், ஆம் ஆத்மி அமைச்சர்கள் பதவி விலகக்கோரி பாஜக எம்.எல்.ஏக்களும் சட்டப்பேரவை வளாகத்தில் இரவு தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணமதிப்பிழப்பின் போது காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இருந்த சக்சேனா, 1,400 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை மாற்றுமாறு தனது ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களின் உள்ளிருப்புப் போராட்டத்தையடுத்து, ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளான ஆம் ஆத்மி அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி பாஜக எம்.எல்.ஏக்களும் சட்டப்பேரவை வளாகத்தில் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.