கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று பெங்களூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்ப்டடுள்ளது.
பெங்களூரில் நேற்று பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருகியது. தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.மரங்கள் விழுந்ததால் ஆங்காங்கே போக்குவரத்தும் தடைபட்டது. மழைக்கு இரண்டு பேர் பலியான நிலையில் சுமார் 4 ஆயிரம் வீடுகளில் மழை நீர் புகுந்தது.
ராமநகரா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ராம்நகர் பிலகும்பா சர்வீஸ் ரோடு அருகே பெய்த கனமழையில் தனியார் பேருந்து அடித்துச் செல்லப்பட்டு, பேருந்தில் சிக்கிய பயணிகளை அப்பகுதி மக்கள் மீட்டனர்.
பெங்களூரு - மைசூர் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனிடையே வானிலை காரணமாக பெங்களூர் வந்த சில விமானங்கள் தரையிறங்க முடியாத நிலையால் சென்னைக்குத் திருப்பி விடப்பட்டன
மழை காரணமாக இன்று பெங்களூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.