செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சட்டவிரோத கட்டுமானம் தகர்ப்பு.! 9 விநாடிகளில்...!

Aug 29, 2022 07:19:11 PM

விதிகளை மீறிக் கட்டப்பட்ட நொய்டாவின் இரட்டை கோபுர கட்டிடங்கள் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதில் 10 நொடிகளுக்குள் அது கல் மற்றும் மண்குவியலாக மாறியது.

டெல்லியை அடுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா நகரில் சூப்பர்டெக் நிறுவனம் கட்டிய எமரால்ட் என்ற குடியிருப்பு வளாகத்திற்குள் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் 32 மற்றும் 29 மாடிகளைக் கொண்டு இரட்டைக் கோபுர கட்டங்களில் 900க்கும் அதிகமான ஃபிளாட்டுகள் வரை கட்டப்பட்டன.

2012 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட 14 மாடிகளை 40 மாடிகளாக உயர்த்திக் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதன் பின்னணியில் பெரும் ஊழல் இருந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் இரட்டை கோபுர கட்டடங்களை தகர்க்க அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை உச்சநீதிமன்றம் அண்மையில் உறுதி செய்தது.

இதையடுத்து மும்பையை சேர்ந்த எடிபைஸ் என்ஜினியரிங் என்ற நிறுவனம் மூலம் திட்டமிட்டபடி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு 3700 கிலோ வெடிபொருட்களைப் 7 ஆயிரம் இடங்களில் பயன்படுத்தி இரு கட்டிடடங்களும் தகர்க்கப்பட்டன.

ஒன்பது ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இரட்டை கோபுர குடியிருப்புகள் ஒன்பதே நொடிகளில் தரைமட்டமானது. தகர்ப்பதற்கான பொத்தானை அழுத்தியவர் கட்டடம் இடிந்து விழுவதைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதார்.

100 மீட்டர் உயரம் கொண்ட இரு கட்டிடங்களும், இந்தியாவில் இதுவரை தகர்க்கப்பட்ட கட்டிடங்களிலேயே அதிக உயரம் கொண்டவை ஆகும். தூசு படலம் காரணமாக அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. 10 மீட்டருக்கு அருகில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை.

கட்டடங்களைத் தகர்க்கும் போது அருகில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் அளிக்கும் விதமாக 100 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டது.

கட்டிடங்களை தகர்க்க மட்டும் 20 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. அதில் 17 கோடியே 50 லட்சம் ரூபாயை சூப்பர்டெக் கட்டுமான நிறுவனமும் எஞ்சிய தொகையை குடியிருப்பு நல சங்கமும் அளிக்கிறது. கட்டடம் இடிக்கப்படுவதை ஒட்டி அப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டது. போக்குவரத்து நிறுத்தப்பட்டு சாலைகள் மூடப்பட்டன.

அருகில் குடியிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்புறப்படுத்தப்பட்டனர். கட்டடம் இடிக்கப்பட்ட பின்னர் நேற்று மாலை தங்கள் வீடுகளுக்கு அவர்கள் திரும்பி வந்தனர்.

எரிவாயு மற்றும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு பின்னர் மாலையில் வழங்கப்பட்டது. இடிக்கப்பட்ட கட்டடங்களின் 55 ஆயிரம் டன் கழிவுகளை நீக்குவதற்கு லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவற்றை முழுவதுமாக அகற்ற மூன்று மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.

 


Advertisement
தீபாவளி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முவுர் கொலை..
காரைக்கால் அரசு அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த திருநங்கை .!
புதுச்சேரி விடுதலைதினத்தையொடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி
நாடு முழுவதும் ஒளிவீசும் மின்விளக்குகளால் சிறப்படைந்த தீபாவளி பண்டிகை
வெடித்துச் சிதறிய வெங்காய வெடிகள் துண்டு துண்டான இளைஞரின் உடல்
அயோத்தியில் 25 லட்சம் அகல்விளக்குகளை ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவ விழா
நாடு முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாட்டம்
தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு பிரதமர் மோடி இன்று மலர் தூவி மரியாதை
வடமாநிலப் பகுதிகளில் வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று மாசு - புகைமூட்டம்
கேரளா, கோவில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து.. 154க்கும் மேற்பட்டோர் காயம்

Advertisement
Posted Nov 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வேலு நாச்சியார்.. குழந்தையுடன் போர்க்களத்துக்கு சென்றாரா ? "அண்ணே அது லட்சுமி பாய்..!" சீமானின் திடீர் தடுமாற்றம்

Posted Nov 02, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காதலனை கரம் பிடிக்க போலீஸ் வேடமிட்ட பெண்.. 'ஓசி'யில் மேக்கப் போட முயன்று சிக்கினார்..ராஜதந்திரம் அனைத்தும் வீணானது!

Posted Nov 02, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓவர்.. ஓவர் .. போதை.. ஓவர்.. போலீஸ்கிட்ட வம்புச் சண்டை.. சட்டையும்.. வண்டியும் போச்சு..! போதையன்ஸ் தீபாவளி அட்ராசிட்டி

Posted Nov 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் வெடித்த ஏர் பேக்.. பலியான மாணவன்.. ஓவர் ஸ்பீடால் பறிபோன உயிர்

Posted Nov 01, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறிய வெங்காய வெடிகள் துண்டு துண்டான இளைஞரின் உடல்


Advertisement