வந்தே பாரத் விரைவு ரயில், சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தை எட்டியுள்ளது.
நவீன அம்சங்கங்கள் மற்றும் சிறப்பு வசதிகளுடன், அதிவேகத்தில் செல்ல கூடிய வகையில் வந்தே பாரத் விரைவு ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானின் கோட்டா மற்றும் மத்திய பிரதேசத்தின் நாக்டா இடையே நேற்று நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் அந்த ரயில் 180 கி.மீ. வேகத்தை எட்டியது.
அதிவேகத்தில் அந்த ரயில் சென்ற போது தண்ணீர் நிரப்பபட்ட கண்ணாடி கிளாஸ் நிலையாக இருந்த வீடியோவை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.