இந்தியாவிலேயே முதன் முறையாக மிக் 23 போர் விமானம் ஒன்று ஒடிசா மாநிலம் கட்கடி கிராமத்தில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் விமானப் படையின் வெற்றிகளுக்கு உதவியது இந்த போர் விமானம். பொதுமக்கள் இந்த விமானத்தை இலவசமாகப் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
போர் விமானத்தைக் காண பெரும் ஆர்வத்துடன் ஊர் மக்கள் திரண்டிருந்தனர். இளைஞர்களை ராணுவம் மற்றும் விமானப்படையில் சேர இந்த நடவடிக்கை ஊக்கம் அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்