முதலமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, நிலக்கரி சுரங்க குத்தகையை தனது பெயரிலேயே ஒதுக்கீடு செய்து கொண்ட குற்றச்சாட்டில், ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனை எல்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீலிட்ட உறையில் இந்த பரிந்துரையை தேர்தல் ஆணையம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்கட்சியான பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தீவிர விசாரணைக்கு பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
முதலமைச்சர் பதவி பறிபோனால், தனது மனைவி கல்பனா சோரனை முதல்வராக்கும் திட்டத்தில் ஹேமந்த் சோரன் இருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.