புற்றுநோயை உண்டாக்கும், சீனாவின் தரம் குறைந்த பிவிசி இறக்குமதியைத் தடுத்துநிறுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
குடிநீர்க் குழாய்களைத் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருளான பிவிசி பிசின் சீனாவில் இருந்து பெருமளவு இறக்குமதி செய்யப்படுகிறது. 6 ஆயிரம் டன்னாக இருந்த மாத இறக்குமதி, தற்போது ஒரு லட்சம் டன்னாக அதிகரித்திருப்பதாகவும், இந்த பிவிசி பிசின் ஜலஜீவன் திட்டத்திற்கான குடிநீர்க் குழாய்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பிவிசி விலையை 27 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ளநிலையில், இறக்குமதி அதிகரிக்க காரணம் என்ன என விசாரணை நடத்த பொருளாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.