மத்திய பிரதேசத்தில் சிமி இயக்கத்தினரின் பயங்கரவாத நடவடிக்கைகளை பா.ஜ.க. வேருடன் அழித்துவிட்டதாகவும், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமைதிக்கான புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
போபாலில் காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் சுமார் 35 ஆயிரம் போலீசார் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளதாக கூறினார்.
இதன் காரணமாகவே, நாடு பாதுகாப்புடன் உள்ளதாகவும் நக்சல்வாதம் ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.