ராஜஸ்தானில் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வரும் சூரியஒளி மின்னுற்பத்தித் திட்டத்தில் 49 விழுக்காடு பங்குகளை வாங்குவதாக நார்வே அறிவித்துள்ளது.
தார் சூர்யா 1 என்னும் பெயரில் 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 420 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டம் இத்தாலியின் எனல் கிரீன் பவர் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வருகிறது.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டின்படி இந்தத் திட்டத்தில் 49 விழுக்காடு பங்குகளை நார்வேயின் நிதியங்கள் வாங்க உள்ளதாக அந்நாட்டுத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது 6 இலட்சத்து 15 ஆயிரம் டன் கார்பன் டை ஆக்சைடு காற்றில் கலப்பது தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.