டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதையடுத்து மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து சன்யுக்த் கிசான் மோர்ச்சா சங்கம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் நேற்று முதலே ஜந்தர் மந்தரை நோக்கி செல்ல தொடங்கியதால், டெல்லியின் சிங்கு, காஜிபூர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியின் எல்லை நுழைவுப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நொய்டா-சில்லா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.