புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள, ஏற்கனவே அரசு உதவிதொகை பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் தலா 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசின், 10 ஆயிரத்து 696 கோடி ரூபாய் மதிப்பிலான 2022-23ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
புதுச்சேரியில் சட்டப்பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும், அதற்கு அடிக்கல் நாட்ட பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் ரங்கசாமி கூறினார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடி கணினி வழங்கப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகளையும் முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.