ஓடிசா மாநிலத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
kalahandi பகுதியில் சாலைகளில் மழைநீர் வெள்ளமென சூழ்ந்துள்ளதால் கார், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சிரமமடைந்தனர். மேலும் அங்குள்ள வீடுகளிலும் மழை வெள்ளம் புகுந்துள்ளது.
இதற்கிடையில் balasore மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். ரப்பர் படகுகளில் சென்ற தீயணைப்புத்துறையினர் கழுத்து வரை சூழ்ந்துள்ள வெள்ளத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டனர்.