இலவசங்கள் ஒருபோதும் இலவசமாக வழங்கப்படுவதில்லை என்றும், அரசியல் கட்சிகள் இலவசங்கள் பற்றி வாக்குறுதி அளிக்கும் போது அதற்கான நிதியாதாரங்கள் குறித்து வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு உறுப்பினர் ஆஷிமா கோயல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்து விளக்கும் போது, வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுவது குறையும் என்றார்.
மேலும், இலவசங்கள் உற்பத்தியை பாதித்து மறைமுக செலவையே அதிகரிக்கும் என்றும், இலவசங்களை வழங்குவதற்கான தொகையை அரசுகள் வேறு வகையில் ஈடுசெய்யும் என்றும் ஆஷிமா கோயல் கூறினார்.