அசாமில் அரசுப் பணிகளுக்காக நடைபெற்ற தேர்வில், முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்வு மையங்கள் அமைந்த பகுதியில் இணையதள சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.
அம்மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப, இன்று, வரும் 28ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் 11ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக இன்று தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வு மையத்திற்கு நூறு மீட்டர் சுற்றளவில் இணையசேவை துண்டிக்கப்பட்டதுடன், சில இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.