டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்பட 13 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக வெளியான தகவலை சிபிஐ மறுத்துள்ளது.
மதுபானக் கடை உரிமம் வழங்கிய முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சரும், கலால் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, கடந்த 19ம் தேதி சிசோடியாவின் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட 31 இடங்களில் சோதனை நடத்தி முக்கியமான இமெயில்கள், கணினி ஆவணங்களைக் கைப்பற்றின.
இந்நிலையில், சோதனையில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாகவும், சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க உள்ளதாகவும் சிபிஐ விளக்கமளித்துள்ளது.