நாடு முழுவதும் 5 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் கருத்தரங்கில் பேசிய அவர், நாட்டில் 50 வழக்குகள் தீர்க்கப்பட்டால், புதிதாக 100 வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக தெரிவித்தார்.
நிலுவை வழக்குகள் தொடர்பாக மற்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது தவறானது எனக்கூறிய கிரண் ரிஜூஜூ, வழக்குகளுக்கு தீர்வு காண சாத்தியமான வழிகளில் உதவ சட்டத்துறை தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.