மதுபானக் கடை உரிமம் வழங்குவதில் முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சரும், கலால் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ, சிசோடியா வீடு உள்பட 21 இடங்களில் சோதனை நடத்தியது.
சில கலால்துறை அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அரசு மட்டுமே மதுபானக் கடைகள் நடத்தும் என்று புதிய மதுபானக் கொள்கையை அறிவித்த சிசோடியா, பின்னர் அதனை திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.
சிசோடியாவிற்கு நெருக்கமான நபர் நடத்தும் நிறுவனத்திற்கு மதுபான வியாபாரி ஒருவர் ஒரு கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது.