கிழக்கு லடாக் எல்லையை ஒட்டியுள்ள பான்காங் ஏரியில் சீனா இரண்டு பாலங்கள் அமைப்பதாக முன்பு தகவல் வெளியான நிலையில், ஒரே பெரிய பாலத்தை சீன ராணுவம் கட்டி வருவதாக சாட்டிலைட் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
உயர் ராணுவத் தளவாடங்களைக் கொண்டு செல்வதற்கு ஏற்ற பாலத்தின் கட்டுமானப் பணிகள் அங்கு நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த விண் தொழில்நுட்ப அமைப்பு ஒன்று இதன் படங்களை வெளியிட்டுள்ளது.
சீனப்படைகள் விரைவாகவும் அதிகளவிலும் ஆயுதங்களை கொண்டு செல்ல இந்தப் பாலம் கட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.