இலவசங்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில் ஆந்திர அரசு தாமாக முன்வந்து இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு மனுதாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.எஸ்.ஆர்.கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் விஜய சாய் ரெட்டி, ஆந்திர அரசு அறிவித்துள்ள இலவசத் திட்டங்கள் சமூகத்திற்கான முதலீடுகள் என்று கூறினார்.
ஆந்திர அரசு விடுத்துள்ள அறிக்கையில் 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி, மத்திய அரசின் நிதியில் மாநில அரசுகளுக்கு 41 சதவீதப்பங்கு உள்ளது என்றும் கடந்த ஆண்டில் 29 புள்ளி 35 சதவீத நிதி மட்டுமே அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.