ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மலைச்சாலையில் இருந்து ஆற்றங்கரையில் கவிழ்ந்த விபத்தில், 6 வீரர்கள் உயிரிழந்தனர்.
அமர்நாத் யாத்ரீகளின் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்ட இந்தோ - திபெத் எல்லை படை வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீசார் உட்பட 39 பேருடன் சந்தன்வாரியிலிருந்து பஹல்காம் நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்தது.
பஹல்காமின் பிரிஸ்லான் பகுதிக்கு வந்த போது பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், ஆற்றங்கரையில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த வீரர்கள் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.