நாட்டின் வளர்ச்சி விகிதம் 11 சதவீதத்தை எட்டினால், வரும் 2031ஆம் ஆண்டிற்குள் உலகின் 2ஆவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழும் என ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மைக்கேல் தெபாப்ரதா தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வரில் பேசிய அவர், நடப்பாண்டில் உலக பொருளாதார வளர்ச்சிக்கு, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா முக்கிய உந்து சக்தியாக இருக்கும் என்றார். பொருளாதார சவால்களை சமாளிக்கும் பட்சத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டை இலக்க வளர்ச்சியை இந்தியா எட்டும் என்றும் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் கூறினார்.