காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி இன்று விருந்தளித்து கலந்துரையாடுகிறார்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் பன்னிரண்டு நாட்கள் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 8ந் தேதி முடிவடைந்தது. இந்தியாவில் இருந்து 210 பேர் பங்கேற்ற நிலையில், 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என்று மொத்தம் 61 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்தது. மல்யுத்தத்தில் 6 தங்கம் உள்பட 10 பதக்கங்களைக் குவித்தனர். போட்டிகளில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றவுடன் உடனுக்குடன் ட்விட்டர் மூலம் பிரதமர் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று விருந்தளிக்க உள்ளார்.
காமன்வெல்த் குத்துச்சண்டையில் பதக்கம் வென்றவுடன் பேட்டியளித்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் சரின் பிரதமர் மோடியை சந்திக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் தனது குத்துச்சண்டை கையுறையில் பிரதமரிடம் ஆட்டோகிராப் வாங்கப்போவதாகவும் அவர் கூறியிருந்தார்.