பிரதமர் ஆகும் லட்சியம் எதுவும் தமக்கு கிடையாது என்றும், எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கத்தான் தாம் பாடுபட்டு வருவதாகவும், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமாரிடம், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பாக நிறுத்தப்படும் பிரதமர் வேட்பாளர் நீங்கள்தானா என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த நிதிஷ்குமார், தமக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை என்பதை இரு கரம் கூப்பி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.