4 கிலோ தங்கம், 200 கிலோ வெள்ளி, 50 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு மினி கூப்பர் கார் ஆகியவற்றுடன் 2 ஜவுளிக்கடைகளையும் வரதட்சனையாக பெற்றுக் கொண்டு புதுப்பெண்ணை, அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக குடிகார மாப்பிள்ளை மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
4கிலோ தங்கம்... 200 கிலோ வெள்ளி... 50 லட்சம் ரூபாய் ரொக்கம்... 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு மினி கூப்பர் கார் ஆகியவற்றுடன் 2 ஜவுளிக்கடைகளையும் வரதட்சனையாக பெற்றுக் கொண்டு புதுப்பெண்ணை, சித்ரவதை செய்த புகாருக்குள்ளாகி இருக்கும் குடிகார மாப்பிள்ளை ‘சரக்கு’ சந்தீப் இவர் தான்..!
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வைத்து பிரபல ஜவுளிக்கடை அதிபரின் அன்பு மகளுக்கும், பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் மகன் சந்தீப்புக்கும் பிரமாண்டமாய் திருமணம் நடந்துள்ளது.
கிலோ கணக்கில் தங்கத்தையும், வெள்ளியையும் அள்ளிக்கொடுத்த பெண்ணின் தந்தை தெலங்கனாவில் இரு ஜவுளிகடையையும் சந்தீப்பிற்காக வைத்து கொடுத்துள்ளார்.
திருமணத்துக்கு பின்னர் மதுவுக்கு அடிமையான சந்தீப் வார இறுதி நாட்களில் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து மது விருந்து வைத்து ஆட்டம் போட்டுள்ளார்.
இதனை கண்டித்த மனைவியை அடித்து உதைத்ததோடு, பரியேறும் பெருமாள் படத்தில் நாயகனை இழிவு படுத்துவதற்காக எதிர் தரப்பினர் நடந்து கொள்ளும் கொடுமையான கழிப்பிட சித்ரவதையையும் செய்ததாக கூறப்படுகின்றது.
இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோருக்கு தகவல் அளித்த நிலையில் அவர்கள் வந்து தங்கள் மகளை மீட்டுச்சென்று பசவனக்குடி போலீசில் புகார் அளித்தனர்.
மதுபோதையில் அவர் செய்த சிதரவதைகளை பட்டியலிட்டு கொடுத்துள்ள பெண் வீட்டார் போதை விருந்து நடத்தி அடாவடியில் ஈடுபட்ட மாப்பிள்ளை மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து புது மாப்பிள்ளை தலைமறைவானதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்லமகளுக்கு வரதட்சனையாக தங்கம் வெள்ளியை அள்ளிக் கொடுத்தும் தகரமான மாப்பிள்ளை கிடைத்த சோகத்தில் பெண்ணின்பெற்றோர் கலங்கிபோய் உள்ளனர்.