வரும் 20ந் தேதிமுதல் ஏர் இந்தியா உள்நாட்டுக்கு சேவைக்கு கூடுதலாக 24 விமானங்களை இயக்க உள்ளது.
தற்போது 70 விமானங்கள் கொண்ட ஏர் இந்தியா நிறுவனத்தில் 54 விமானங்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன. கூடுதலாக 24 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதில் டெல்லி-மும்பை, பெங்களூர்-அகமதாபாத் தடங்களில் இரண்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இதே போல் மும்பையில் இருந்து சென்னை மற்றும் ஹைதராபாத், மும்பை-பெங்களூர் , அகமதாபாத்-புனே தடங்களிலும் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக ஏர் இந்தியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.