மகாராஷ்டிராவில், இரும்பு மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 56 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
வரி ஏய்ப்பு தொடர்பாக, ஜல்னாவில் கடந்த ஆகஸ்டு 1 முதல் 8-ம் தேதி வரை பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில், 56 கோடி ரொக்கம், 32 கிலோ தங்கம், வைரம், முத்து ஆபரணங்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் உள்பட 100 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்து கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
260 அதிகாரிகள் இந்த சோதனையில் பங்கேற்றதாகவும், கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ண சுமார் 13 மணி நேரம் ஆனதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.