மத்திய அரசு வரி வருவாயில் இருந்து ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 666 கோடி ரூபாயை 28 மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2 தவணைகளை ஒரே முறையில் சேர்த்து வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிக அளவாக உத்தரப் பிரதேசத்துக்கு 20 ஆயிரத்து 929 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
பீகாருக்கு 11,734 கோடி ரூபாயும், மத்தியப் பிரதேசத்துக்கு 9,158 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 8,777 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்துக்கு 7,370 கோடி ரூபாயும், ராஜஸ்தானுக்கு 7,030 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 4759 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.