ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து மற்றொரு எஸ்எஸ்எல்வி ராக்கெட் விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என விண்வெளி ஆணையக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.கிரண் குமார் தெரிவித்துள்ளார்.
எஸ்எஸ்எல்வி ராக்கெட் திட்டம் தோல்வியடையவில்லை என்றும் அது வெறும் பின்னடைவுதான் என்றும் கூறினார்.
விரைவில் அடுத்தகட்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று கூறிய அவர், இன்றைய நாள்களில் செயற்கைக்கோள்கள் மிகவும் சிறியதாக உருவாக்கப்பட்டு வருவதால், அதன் வரிசையில் எஸ்எஸ்எல்வி முக்கிய இடம் வகிக்கிறது என்றார்.