பஞ்சாபில் வாகன சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற காரை போலீசார், சினிமா பட பாணியில் துரத்திப் பிடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
பெரோஸ்பூர் மாவட்டத்தில் ரோந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார் சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்றது. இதையடுத்து, அங்கிருந்த போலீசார், ஜீப்பில் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.
மக்கள் கூட்டம் மிகுந்த சாலையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய காரை, போலீஸ் அதிகாரி பாய்ந்து சென்று துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடிக்க முற்பட்டார்.
ஆனால், அங்கிருந்தும் தப்பித்ததால், காரின் டயரை துப்பாக்கியால் சுட்டு பஞ்சராக்கி பிறகு, 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்ற காரை போலீசார் இறுதியில் மடக்கிப் பிடித்து இருவரை கைது செய்தனர்.