இந்தியாவின் முதல் நீருக்கடியில் இயங்கும் மெட்ரோ சேவையின் கிழக்கு-மேற்கு வழித்தடப்பணிகள் அடுத்த ஆண்டிற்குள் நிறைவடையும் என்று கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் ஹூக்ளி ஆற்றின் கீழ் ஹவுராவிலிருந்து சால்ட் லேக் வரை இயக்கப்படும் இந்த மெட்ரோ பாதையின் நீளம் சுமார் 17 கிலோ மீட்டர். 9 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேல் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாகவும், மீதமுள்ள 7 கிலோ மீட்டர் நீளத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓராண்டுக்குள் முழுமையடையும் என்று தெரிவித்துள்ளது.