நாடாளுமன்ற இரு அவைகளும் அறிவிக்கப்பட்ட தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே நிறைவு பெற்றது.
மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தொடரில், பேரழிவு ஆயுதங்கள் தடுப்பு மசோதா, வன உயிரினங்கள் பாதுகாப்பு திருத்த மசோதா, ஊக்கமருத்து தடுப்பு மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டது.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனிடையே, கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில் மக்களவை சபாநாயகர் அறையில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.