மும்பை மாநகரப் போக்குவரத்துக் கழகமான பெஸ்ட் புதிய ஹோ ஹோ குளிர்பதனப் பேருந்துகளை இன்று முதல் அறிமுகம் செய்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல அம்சங்கள் இந்தப் பேருந்துகளில் இடம் பெற்றுள்ளன. 150 ரூபாய் டிக்கெட் வாங்கி இதுபோன்ற பேருந்துகளில் நாள் முழுவதும் மும்பையின் முக்கிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கலாம்.
இதரப் பேருந்துகளிலும் செல்ல அனுமதி உள்ளது.காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.