பாகிஸ்தான் கடற்படையின் ஆலம்கிர் என்ற போர்க்கப்பல் கடந்த ஜூலை மாதம் இந்திய கடல் எல்லையைக் கடந்து குஜராத் அருகில் நடமாடியதை இந்திய கடலோரக் காவல்படையின் ரோந்து விமானம் கண்டுபிடித்ததையடுத்து அக்கப்பல் விரட்டியடிக்கப்பட்டது.
குஜராத் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் சதி இதனால் முறியடிக்கப்பட்டுள்ளது.குஜராத் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இந்தியா தனது சொந்த நாட்டு மீனவர்களின் படகுகளைக் கூட அனுமதிப்பதில்லை.
இந்நிலையில் அப்பகுதிக்கு பாகிஸ்தான் கப்பல் ஊடுருவ முயன்றதால் கடற்படையும் கடலோர காவல்படையும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் கப்பலை திரும்பிப் போகச் செய்தன.