சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் எரிபொருள் தேவையை தொடர்ந்து, கடந்த 2021-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், 25.1 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி தொகை, 2022-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 47புள்ளி 5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியாவிற்கு இரண்டாவது பெரிய கச்சா சப்ளையராக இருந்த சவுதி அரேபியாவை ரஷ்யா முந்திவிட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு பத்து மடங்கு அதிகரித்துள்ளது.
மே மாதத்தில் ஒரு பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 19 டாலர் வரை தள்ளுபடியுடன் கச்சா எண்ணெய்யை இந்தியாவிற்கு ரஷ்யா வழங்குகிறது.