புதிய ரேசன் அட்டைக்கான விண்ணப்ப முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆன்லைன் பதிவு முறையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வீடற்ற மக்கள், இடம் பெயர்ந்தவர்கள், தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறுபவர்கள் போன்றவர்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின்கீழ் ரேசன் அட்டைகளுக்கு இணையம் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.
விரைவில் இத்திட்டம் 36 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் 81 கோடி பேருக்கு தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளில் 4 கோடியே 70 லட்சம் ரேசன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.