ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழுவின் முடிவுப்படி, வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதமான 'ரெப்போ ரேட்' 0.5 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் வீட்டுக்கடன், வாகன கடன், தனி நபர் கடன் வாங்குபவர்களுக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும், வங்கி கடனுக்கான வட்டி சற்று அதிகரிக்கும்.
அதிகரித்துவரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.