மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நான்கு நாள் பயணமாக நேற்று டெல்லி வந்துள்ளார். பிரதமர் மோடியை இன்று அவர் சந்தித்துப் பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்ற குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவையும் மரியாதை நிமித்தமாக சந்திக்க மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் வரும் 7 ஆம் தேதி நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் விவசாயம், சுகாதாரம் பொருளாதாரம் போன்ற முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. இக்கூட்டத்திலும் மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளார்.