அமெரிக்காவை சேர்ந்த பார்ச்சூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக அளவில் தலைசிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலில், பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி 98வது இடம் பிடித்துள்ளது.
நடப்பு ஆண்டுக்கான இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 4 தனியார் நிறுவனங்கள் உள்பட மொத்தம் 9 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனம் கடந்த ஆண்டு 155வது இடத்தில் இருந்த நிலையில், 51 இடங்கள் முன்னேறி 104வது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியன் ஆயில் கார்பரேசன், ஒஎன்ஜிசி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.