இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், ஒரே நாளில் இந்தியா, 2 தங்கம் உள்ளிட்ட 3 பதக்கங்களை வென்றுள்ளது.
லான் பவுல்ஸ் விளையாட்டில் தென்னாப்பிரிக்கா அணியை 17க்கு 10 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றது. ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.
தமிழக வீரர்கள் சரத் கமல், சத்தியன் உள்ளிட்டோரை கொண்ட இந்திய அணி, 3க்கு 1 என்ற கணக்கில் வென்றது. மேலும், பளு தூக்குதல் போட்டியில் விகாஷ் தாகூர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் தொடரில் இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.