அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய தொலைதொடர்புத் துறை 2 முதல் 3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை பெறக்கூடும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் முடிந்த நிலையில், தொலைத் தொடர்புத்துறை வளர்ச்சிப் பாதையில் உள்ளதாகவும், மத்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் நிலையான முதலீடுகளை பெற வழிவகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 5ஜி சேவைகள் குறைவான விலையிலேயே கிடைக்கும் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.